தேனி வீரப்ப அய்யனார் கோயில் மலையில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி சதீஷ்குமார் 23, உயிரிழந்தார்.
சின்னமனுாரில் வசிப்பவர் காளீஸ்வரி 48. இவரது மகன் சதீஷ்குமார் ஆட்டோ ஸ்பேர்ஸ் கடையில் பணிபுரிந்தார்.
நண்பர்களுடன் நேற்று முன்தினம் தேனி வீரப்ப அய்யனார் மலைக்கோயிலுக்கு சென்றார். கோயில் அருகே உள்ள வழுக்குப்பாறைக்கு நண்பர்களுடன் நடந்து சென்றார். அங்கிருந்து செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழந்து தண்ணீர் சென்ற பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டார்.
இதில் தலை, உடல்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை நண்பர்கள் மீட்டனர். சதீஷ்குமார் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
0 Comments