Ad Code

Responsive Advertisement

உலகக் கோப்பையை அவமதித்தாரா மிட்செல் மார்ஷ்?

 



பிரபல ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை அவமதித்தாக இந்தியர்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.  


மிகவும் எதிர்பார்த்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இதனால் இந்தியர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் . 


உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணிக்கு, வெற்றிக் கோப்பையுடன் ரூ.33 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. ரன்னா் அப்-ஆக வந்த இந்திய அணிக்கு ரூ.16 கோடி கிடைத்தது. 


கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றி மகிழ்ச்சியில் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடினர். அதில் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையின் மீது கால் நீட்டியவாறு இருக்கும் புகைப்படத்தினை பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில பகிர்நதிருந்தார். 


இதனைக் கண்ட சில இந்திய ரசிகர்கள் உலகக் கோப்பையை மிட்செல் மார்ஷ் அவமதித்து விட்டாரென இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


சிலர் அது ஒரு கோப்பை மட்டுமே. ஆணவமல்ல. அது அவர்களின் ஆதிக்கம். தேவையில்லாமல் இதை பிரச்னை ஆக்க வேண்டாமெனவும் மார்ஷுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement