Ad Code

Responsive Advertisement

மகளிர் உரிமை திட்டம் - உங்கள் வங்கி கணக்கை சரி பார்க்கவும் - தமிழக அரசு இன்ப அதிர்ச்சி

 



தீபாவளி பண்டிகையை ஒட்டி முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வான பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் தங்கள் செலவுகளை செய்ய வசதியாக முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் தேதி குறித்த விவரமும் தெரியவந்துள்ளது.


பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை சுமார் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பம் அளித்து பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டவர்களில் சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.



தீபாவளியை முன்னிட்டு மகளிர் தங்கள் செலவுகளை செய்ய வசதியாக முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் தீபாவளி 12 ஆம் தேதி வருவதால் 10ஆம் தேதிக்குள் பணத்தை வரவு வைக்க தமிழக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement