ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது.
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு பிரதமர் மோடி அவர்களால் கொண்டு வரப்பட்டு, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது, புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, மக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த பழமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தவித மாற்றம் ஏற்படும் இல்லையே என்ற கருத்தும் உள்ளது இதனால் பாமர மக்கள் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் அதன் பிறகு இந்திய நாட்டில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும் அறிக்கப்பட்டது. இருப்பினும் செப்டம்பர் 30-ஆம் தேதி முடிந்த பிறகும் 7 நாட்கள் காலகெடு நீட்டிக்கப்பட்டது. அக்டோபர் 7ஆம் தேதி வரை 2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுவரை 87 சதவீத நோட்டுகள் திரும்பி வந்துள்ளன என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இன்னும் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த அவகாசம் அக்டோபர், 7ஆம் தேதி வரை அதை நீட்டித்து, ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.
0 Comments