சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 12) சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்து 43 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. ஆனால் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,976-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இன்று சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.38 உயர்ந்து ரூ.5,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.75,500-க்கும் ஒரு கிராம் ரூ.75.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
0 Comments