பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மல்டி அக்கவுண்டு என்கிற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. செயலியை அப்டேட் செய்பவர்களுக்கு இந்த புதிய அம்சத்தை உடனடியாக பயன்படுத்த முடியும்.
தொழில்நுட்ப பயன்பாட்டில் ஏற்படும் தேவைகளை அவ்வப்போது அப்டேட்டாக வழங்குவது வாட்ஸ் அப் செயலியின் தனித்துவமாகும். அதன்காரணமாகவே பல்வேறு ஆண்டுகள் கடந்தும் தகவல் பரிமாற்ற செயலிகளில் இன்னும் முன்னிலை வகித்து வருகிறது வாட்ஸ் ஆப்.
சமீப காலங்களில் வாரத்துக்கு வாரம் வாட்ஸ் ஆப் அப்டேட்டை அறிமுகம் செய்து வருகிறது. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு புதிய அப்டேட்டுகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
அந்த வரிசையில் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த வந்த ‘மல்டி அக்கவுண்டு’ அம்சத்தை வாட்ஸ் அப் செயலி சோதனை முயற்சியாக துவங்கியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் ஒரே சாதனத்தில் பல்வேறு வாட்ஸ் ஆப் கணக்குகளை இணைத்து ஸ்விட்சு செய்து பயன்படுத்த முடியும்.
ஏற்கனவே இந்த அம்சம் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்தால், வாட்ஸ் ஆப் செயலியிலேயே மல்டி அக்கவுண்டு அம்சத்தை பயன்படுத்த முடியும்.
இதுதொடர்பாக தகவல்கள் Wabetainfo வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக வாட்ஸ் ஆப் பீட்டா பயனாளர்களில் 2.23.17.1 மற்றும் 2.23.17.1 போன்ற வெர்ஷனில் மல்டி அக்கவுண்டு சேவை பயன்பாட்டில் உள்ளது.
0 Comments