Ad Code

Responsive Advertisement

உங்கள் கனவில் தங்க நகைகள் வந்தால் என்ன நடக்கப்போகிறது தெரியுமா?

 



தங்கம் என்பது எப்பொழுதுமே மதிப்பு மிக்கது. ஆண் பெண் என அனைவருமே நகைகளை வாங்குவதிலும் தங்கத்தை சேமிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த தங்கம் நம்மிடம் இருந்தால் அவசர பண தேவைக்கு நாம் யாரையும் நாட வேண்டிய அவசியம் இல்லை.


அப்படி பட்ட தங்கத்தையோ தங்க நகைகளையோ நாம் கனவில் கண்டால் பல பலன்கள் உள்ளது. அவைகளை என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்


உங்கள் கனவில் ஒரு தங்கத்தேரை நீங்கள் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த காலகட்டத்தில் செய்யப்போகின்ற ஒரு காரியத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள்.


நகையை கனவில் காண்பதின் போது பலன் குறிப்பாக, நகைகள் கனவில் வருவது வரப்போகும் பெரிய செலவை பற்றி தெரிவிக்கிறது. அது திருமணம் அல்லது குடுப்பத்துடனான சுற்றுலா போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.


எப்போதாவது கனவில் நகைகளை பார்த்தால், அது உங்கள் சந்தோச தருணத்தின் செலவினை குறிக்கும் ஒன்று.

நகையை அதிகமாக கனவில் பார்த்தாலோ அல்லது குறைவாக பார்த்தாலோ நல்லதிற்கே.


Also Read:கனவில் வரும் நிழல்கள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கைகள் பற்றி தெரியுமா?


கனவில் தங்கம் நகையை பரிசளிப்பது

நீங்கள் நகையை பரிசளிப்பது போல் கனவு கண்டாலோ அல்லது உங்கள் துணைவர் அல்லது துணைவி நகையை பெறுவதை போல் கனவு கண்டால் நீங்கள் விரைவில் மிகப் பெரிய இலாபத்தை ஈட்ட போகிறீர்கள் என்று அர்த்தம்.


இது உங்களுக்கு மிகப்பெரிய தொழில் வாய்ப்பை உங்களுக்கு தரப் போவதாக அர்த்தம்.


யாராவது ஒருவர் நகையை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், உங்கள் நெருங்கிய உறவினருக்கு பிரச்சனைகள் வரக்கூடும்.


அதுமட்டுமின்றி, உங்களுக்கு நெருக்கிய ஒருவருக்கு வேலை இல்லாமல் போகவோ அல்லது திருமணம் நிற்கும் நிலையோ ஏற்படப் போவதை உணர்த்தும் அறிகுறி.


இது ஏதோ ஒன்றின் முடிவை உணர்த்த கூடிய ஒன்றாகவோ அல்லது உங்களை மகிழ்ச்சியை குறைக்க கூடிய ஒன்றாகவோ இருக்கும்.


ஆனால் நகை அணிந்திருப்பது திருமண பெண் என்றால் அதன் பலன் மாறுபடும். இது மகிழ்ச்சிக்கான அறிகுறி. இது உங்கள் நெருக்கிய உறவினர் ஒருவருக்கு திருமணம் ஏற்பட போவதற்கான அறிகுறி.


மேலும் இது குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறியாகவோ அல்லது கருத்தரிக்க போவதற்கான அறிகுறியாக இருக்கலாம். எப்படியோ இது மகிழ்ச்சியை குறிக்க கூடிய ஒன்று தான்.


ஒருவர் தங்கத்தை உங்களிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் உங்களின் செல்வாக்கு மற்றவர்களிடம் அதிகரிக்கும். நீங்கள் புகழடைய போகிறீர்கள் என அர்த்தம்.


தங்க நாணயத்தை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு செல்வம் அதிகரிக்கப்போகிறது. செய்யும் காரியங்களில் புகழ் அல்லது வெற்றி கிடைக்கும். மனநிறைவோடு நீண்ட ஆயுள் வாழ போகிறீர்கள் என அர்த்தம்.


Also Read:உங்கள் கனவில் கோவில், கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?


தங்க இலைகளை நீங்கள் கனவு கண்டால் உங்கள் எதிர்காலம் நல்ல பிரகாசமாக இருக்கும்.


தங்க பானையை நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும் மேலும் புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள்.


தங்கத்தை கண்டுபிடிப்பது போல் நீங்கள் கனவு கண்டால் நீங்கள் புதுவிதமான ஒரு விஷயத்தை வெளியில் சொல்ல போகிறீர்கள் அதன் மூலம் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். மொத்தத்தில் நீங்கள் எல்லாவற்றிலும் ஜொலிக்கப்போகிறீர்கள் என அர்த்தம்.


நகையை நீங்கள் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய தொழில் தொடங்க போகிறீர்கள் அல்லது உங்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய மனசங்கடங்கள் எல்லாம் நீங்கி சந்தோசமாக காணப்படுவீர்கள். மனஅழுத்தம் குறையும்.


நீங்கள் நகையை அடமானம் வைப்பது போல் கனவு கண்டால் நீங்கள் ஏதாவது பொருளை விற்க வேண்டியது வரும்.


நகை திருட்டு போவது போல நீங்கள் கனவு கண்டால் திடீர் பணக்காரன் ஆகிவிடுவீர்கள். அது நேர்மையான வழியில் இருந்தால் நல்லது. சில வேளைகளில் பாவ செயல்கள் மூலமும் பணவரவு வரலாம். கவனமாக இருக்க வேண்டும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement