Ad Code

Responsive Advertisement

குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன தெரியுமா?

 



மாறுபட்ட சூழலில் பாதுகாப்பாக வளர்வதற்கும், தாயின் கருவில் இருந்து வெளியே வந்தவுடன் பிற நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் விதமாக தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது.


வருமுன் காப்பது போல பல்வேறு விதமான தடுப்பூசிகள் குழந்தைகளை எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பேருதவியாக உள்ளது என்பது தான் நிதர்சன உண்மை.


குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்கின்றனர் சுகாதார ஆய்வாளர்கள். எனவே தான் குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசிகளை முறையாக செலுத்த வேண்டும்.


தடுப்பூசிகள் குழந்தையின் ஆரோக்கிய அரணாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதோடு எதிர்காலத்தில் ஏற்படும் பெரும் செலவையும், பெற்றோர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலையும் குறைப்பதாக தடுப்பூசிகள் அமைகிறது. எனவே பிறந்தது முதல் குறிப்பிட்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை முறையாக செலுத்த வேண்டும்.


குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளும் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


மீஸ்லஸ், மம்ப்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி:

மீஸ்லஸ், மம்ப்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி தட்டம்மை, சளி மற்றும் மணல்வாரிக்கு எதிராக போடப்படுவதாகும். இத்தடுப்பூசி இரண்டு அளவுகளில் செலுத்தப்படுகிறது. முதலாவது டோஸ் குழந்தைகளின் ஒன்பதாவது மாதம் முதல் பதினைந்து மாதங்கள் வரை கொடுக்கப்படுகிறது, இரண்டாவது டோஸ் பதினைந்து மாதங்கள் முதல் ஆறு வயது வரை செலுத்தப்படுகிறது.


பி.சி.ஜி தடுப்பூசி:

பிறந்த குழந்தைகளுக்கு போடப்படும் முதல் தடுப்பூசி அதாவது தோல் ஊசியைத் தான் பி.சி.ஜி தடுப்பூசி என்கிறார்கள். டி.பி எனப்படும் காச நோய் வருவதைத் தடுக்கிறது. அரை மில்லி அளவிற்கு இந்த வாக்சின் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. இது மூளை மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.


உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, இந்தியாவில் மட்டும் ஒருகோடியே நாற்பது லச்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படும் நிலையில், இதில் இருபது சதவீதம் பேர் குழந்தைகள் ஆவார்கள். எனவே இந்த தடுப்பூசியை மறக்காமல் செலுத்த வேண்டும் என்கின்றனர் சுகாதார ஆய்வாளர்கள்.


பெண்டாவலன்ட் தடுப்பூசி:

டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டன்ஸ், ஹைபடைடிஸ் பி மற்றும் ஹிப் போன்ற உயிருக்கு ஆபத்தான ஐந்து நோய்களுக்கு எதிராக போராடும் திறன் கொண்டதாக பெண்டாவலன்ட் தடுப்பூசி உள்ளது.


குழந்தைகளுக்கு ஆறாவது, பத்தாவது, பதிநான்காவது வாரங்களில் மூன்று தவணைகளாக போலியா சொட்டு மருந்து உடன் இந்த பெண்டாவலன்ட் தடுப்பூசியை குழந்தைகளுக்கு போட வேண்டும்.


ரோட்டா வைரஸ் தடுப்பூசி:

இளம் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படும் வயிற்றுப்போக்கு போன்ற பிற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க ரோட்டோ வைரஸ் தடுப்பூசி பேருதவியாக உள்ளது.


இது குழந்தைகள் பிறந்து 6, 10, 14 வாரங்களில் 0.5 மில்லி அளவுகளில் ஏனைய தடுப்பூசிகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.


நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசிகள்:

எதிர்காலத்தில் ஏற்படும் நிமோகாக்கல் நோய் உள்பட அனைத்து சுகாதார பிரச்சனைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதற்கு இந்த நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குழந்தைகளுக்கு ஒன்பது மாதங்களில் இரண்டு டோஸ்களாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.


ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி:

இந்தியாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு டெங்கு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிற நோய் வைரஸ்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி பேருதவியாக உள்ளது. இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வயது வரை செலுத்தப்படுகிறது.


குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வித நோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், மறக்காமல் பிறந்தது முதல் குறிப்பிட்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கின்றனர் சுகாதார ஆய்வாளர்கள்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement