Ad Code

Responsive Advertisement

சர்க்கரை நோயாளிகள் 5 சர்க்கரைய சாப்பிடலாம்

 



உங்களுக்கு தெரியுமா நாம் அன்றாடம் சாப்பிடும் கரும்பில் இருந்து எடுக்கும் சர்க்கரையை விட பலமடங்கு இனிப்பு சுவையோடு எந்த வித பாதிப்பும் இல்லாமல் சர்க்கரை வியாதிக்காரர்களும் சாப்பிடக் கூடிய மாற்று சர்க்கரை பொருட்கள் உள்ளன. நேரடியாக பழங்கள் மற்றும் இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சர்க்கரை வகைகள் உங்களின் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தாமல் உங்கள் நாக்கில் இனிப்பின் சுவையை நடனமாட செய்யும்.


​தேங்காய் சர்க்கரை

தென்னை மரத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் தேங்காய் சர்க்கரை பல விதமான ஊட்டச்சத்துக்களை தனக்குள் கொண்டுள்ளது. இதன் குறைந்த கிளைசெமிக் பண்பு உங்கள் ரத்தத்தில் உடனடியாக ரத்த சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக்கொள்கிறது. இதில் அயர்ன், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், ஜின்க் உட்பட பல விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் நார்மல் சர்க்கரையான வெள்ளை சர்க்கரையை விட இது பல மடங்கு சத்தானது.


பேரிச்சம்பழம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழத்தை பலரும் சர்க்கரைக்கு மாற்றாக ஒரு சில டெஸெர்ட்ஸ் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்துகிறார்கள். இவை ரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக உட்கொள்ளலாம். சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல ஊட்டச்சத்துள்ள மாலைநேர ஸ்னாக்ஸ்.


சைலிட்டால் (Xylitol)

பல விதமான பல வகைகளில் கிடைக்கக்கூடிய சர்க்கரைக்கு மாற்றான இனிப்பு பொருள்தான் சைலிட்டால். இது உங்களுக்கு சர்க்கரை ஏற்படுத்துவது போன்ற சொத்தை பல் பிரச்சனைகளை ஏற்படுத்தாது. இதில் உங்கள் டயட் திட்டத்திற்கு ஏற்ற வகையிலான ஒரு சில கலோரிகளும் உள்ளது. இருப்பினும் இதை எவ்வளவு எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். அது உங்களின் ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்து கொள்வது நல்லது.


​சீனித்துளசி ( stevia )

சீனித்துளசி என்று கூறப்படும் இந்த செடி இனிப்புத்தன்மை வாய்ந்தது. இதன் இலைகளை காயவைத்து அரைத்து பலரும் நார்மல் சர்க்கரை போலவே பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதன் இலைகளை நேரடியாக டீ, காபி போன்றவற்றில் போட்டு இனிப்பு சுவையோடு அருந்துகின்றனர். இது சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு தன்மையோடு இருக்குமாம்.


மோன்க் பழம் (monk fruit)

மெலன் வகையை சார்ந்த பழமான மோன்க் பழம் பிரத்யேகமாக சர்க்கரை நோயாளிகளுக்கானது. இது சீனாவை சேர்ந்த பழமாகும். சமீப காலமாக இந்தியாவிலும் விளைவிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு சில நாள்பட்ட நோய்களுக்கும் மருந்தாக பயன்படக் கூடியது . குறிப்பாக சர்க்கரையை விட 150 மடங்கு அதிகமான இனிப்பு சுவை கொண்டது. பல உணவுப்பொருட்களில் இதை நேரடியாக பயன்படுத்தி சமைக்கும்போது அட்டகாசமான இனிப்பு சுவையை தரும். இதில் குறைந்தளவு கலோரிகளே உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும், எடைக்குறைப்பு செய்பவர்களும் இதை தைரியமாக சாப்பிடலாம்.


இவற்றை பயன்படுத்தினாலும் அடிக்கடி உங்களின் ரத்த சர்க்கரை அளவை கணக்கிட்டு அதற்கேற்ற அளவில் இவற்றை உட்கொள்வது நல்லது. இவற்றில் உள்ள பண்புகள் உடனடியாக உங்களது ரத்த சர்க்கரை அளவை உயர்த்த வாய்ப்பில்லை. இருப்பினும் தொடர்ந்து இதை பயன்படுத்தும்போது சோதனைகள் செய்து கொள்வது உங்களை ஆரோக்கியமாகவும், உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள்ளும் வைத்துக் கொள்ளும். குறிப்பாக உங்கள் மருத்துவர் ஆலோசனையோடு இவற்றை பயன்படுத்த வேண்டும்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement