பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
அந்நிறுவனங்கள், தமிழகத்தில் ஏஜென்சி ஊழியர்கள் வாயிலாக, தினமும் சராசரியாக, ஐந்து லட்சம் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
ஊழியர்கள், ஒரு சிலிண்டருக்கு நிர்ணயித்துள்ள விலையுடன் சேர்த்து, கூடுதலாக, 60 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இதனால், பலரும் பாதிக்கப்படுகின்றனர். இது, அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது.
இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் விடுத்த அறிக்கை:
சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்களிடம் ரசீதில் உள்ள தொகையை தவிர, வாடிக்கையாளர் கூடுதல் பணம் தர கூடாது; சிலிண்டரை வீட்டு வாசலில் வினியோகம் செய்வது கட்டாயமாகும்.
காஸ் ஏஜென்சிகளுக்கு சென்று சிலிண்டர் எடுக்கும் போது, அதற்குரிய டெலிவரி தொகையை ஏஜென்சிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வாடிக்கையாளரே ஏஜென்சிக்கு சென்று சிலிண்டரை எடுத்து கொள்ளும் போது அதற்கு உரிய, 29.26 ரூபாய் போக மீதி தொகை வழங்கினால் போதும்.
0 Comments