Ad Code

Responsive Advertisement

சுதந்திர தினத்தில் முதல்முறையாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 3-ம் வகுப்பு மாணவன்

 



சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் நீதிபதிகள், முன்னாள், இன்னாள் அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் முதல்முறையாக, அரசின் சிறப்பு அழைப்பாளராக 3-ம் வகுப்பு மாணவர் லிதர்சன் அழைக்கப்பட்டிருந்தார்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பாப்பனம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் லிதர்சன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னையில் நடக்கும் சுதந்திர தின கொடியேற்று விழாவை பார்க்க ஆசைப்படுவதாக தங்கள் ஆசிரியர் ஜோஷ்வாவிடம் கூறியுள்ளனர்.


கட்டுரை போட்டி: அதற்கு அவர், சுதந்திர தினம் குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியுள்ளார். 6 பேர் கட்டுரை எழுதியதில், முதலிடம் பெற்ற லிதர்சனுக்கு தமிழக அரசின் பொதுத்துறை அனுமதி அளித்து, அரசின் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது.


அதன்படி, தனது தாய் ஆனந்தவல்லியுடன் சென்னை வந்த லிதர்சன், கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். லிதர்சன் கூறும்போது, ‘‘சென்னைக்கு முதல்முறையாக வந்து சுதந்திர தின விழாவை பார்த்தது சந்தோஷமாக உள்ளது’’ என்றார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement