Ad Code

Responsive Advertisement

வருவாயை அள்ளப்போகும் Twitter பயனாளர்கள்

 



யூடியூப் போல, டிவிட்டர் பயனாளர்களும் இனி விளம்பர வருவாய் மூலம் வருவாயை ஈட்டும் வசதி விரைவில் வரவிருக்கிறது.


மிகப்பெரிய தொழிலதிபர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் ப்ளூ டிக் பெற கட்டணம், தனி நபர்களை சப்ஸ்கிரைப் செய்து, சிறப்பு தகவல்களை பெறுதல் போன்ற வசதிகள் அடக்கம்.


ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு பல விமரிசனங்களைப் பெற்ற போதிலும், பலரும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றனர். ஆனால், அப்போதே, ப்ளூ டிக் பெறுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் டிவிட்டர் விளம்பரம் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க். தற்போது தான் சொன்னதை செய்தும் காட்டியுள்ளார்.


அதன்படி, ப்ளூ டிக் பெற்ற பயனாளர்களுக்கு, விளம்பர வருவாயில் ஒரு தொகையை பகிரும் பணி தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிவிட்டர் கிரியேட்டர்களுக்கு இது தொடர்பான மின்னஞ்சலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாம். சிலர், தங்களுக்கு டிவிட்டரிலிருந்து வந்திருக்கும் வருவாய் தொடர்பான தகவல்களையும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.


ஐரோப்பா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது பரவலாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


டிவிட்டர் தளத்துக்கு போட்டியாக, மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. டிவிட்டரின் செயல்படும் முறை போலவே, இந்த திரெட்ஸ் இருந்ததால் அதன் மீது சட்டப்படி வழக்குத் தொடரப்படும் என்று கூட எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில், தான் டிவிட்டர் பயனர்களுக்கு, விளம்பரத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்ளும் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement