Ad Code

Responsive Advertisement

Twitter - க்கு போட்டியாக #Threads - புதிய செயலி! அறிமுகப்படுத்திய Facebook

 


 


ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்று என மெட்டாவின் ‘த்ரெட்ஸ்’ தளம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 4 மணி நேரத்தில் சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.


இன்ஸ்டாகிராம் தளத்தை அடிப்படையாக வைத்து த்ரெட்ஸ் இயங்குகிறது. பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஏற்கனவே வெரிஃபை செய்யப்பட்ட பயனர்களுக்கு இதில் ப்ளூ டிக்கும் வழங்கப்படுகிறது. இதன் அம்சங்கள் அப்படியே ட்விட்டரை நகல் எடுத்தது போல உள்ளன. முன்னதாக, அமெரிக்காவில் 6-ம் தேதியும் (இன்று), உலக அளவில் 7-ம் தேதியும் (நாளை) த்ரெட்ஸ் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ட்விட்டருக்கு சவால் கொடுக்கும் விதமாக முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட்டது. 


தொடர்ந்து உலக அளவிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதாவது ஈஸ்டர்ன் டைம் நேரப்படி ஜூலை 6, காலை 10 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஆனால், ஈஸ்டர்ன் டைம் நேரப்படி ஜூலை 5, மாலை 7 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


டவுன்லோட் செய்வது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் நேரடியாக ஆப் ஸ்டோரில் இருந்து த்ரெட்ஸ் செயலியை டவுன்லோட் செய்யலாம். அதன் பின்னர் பயனர்கள் தங்கள் இன்ஸ்டா கணக்கு விவரங்கள் மூலமாக இதில் லாக்-இன் செய்யலாம். அதில் இருக்கும் விவரங்களை அப்படியே இதில் சேர்க்கலாம். அதற்கு பயனர்கள் பர்மிஷன் கொடுக்க வேண்டியது அவசியம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement