Ad Code

Responsive Advertisement

வருமான வரி செலுத்த போறீங்களா? - ஜூலை மாதத்தில் இந்த நாட்களை குறிச்சுக்கோங்க!

 



நீங்கள் வருமான வரி வரம்புக்குள் இருப்பவர் என்றால், பல்வேறு வரி கணக்கு தாக்கலுக்கான இறுதிக்கெடு குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


இதை நீங்கள் தவற விடும் பட்சத்தில் அபராதம் செலுத்த நேரிடும் மற்றும் நிதி மேலாண்மையில் சிக்கல் ஏற்படும். வருமான வரிச்சட்டம் மற்றும் விதிமுறைகளில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


வருமான வரிக் கணக்கு விவரங்களை உரிய தேதியில் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அபராதம் மற்றும் அதற்குரிய வட்டித் தொகை ஆகியவற்றை தவிர்க்கலாம். முன்கூட்டியே வரி செலுத்துவது, சுய மதிப்பீட்டின் அடிப்படையில் வரி செலுத்துவது போன்றவற்றின் மூலமாக உங்கள் நிதித்திட்டங்கள் சிக்கலற்றதாக இருக்கும் மற்றும் சட்ட சிக்கல்களில் விலகியிருக்கலாம்.


ஜூலை மாதத்தில் டிடிஎஸ், டிசிஎஸ் போன்ற வரி தொடர்புடைய நடவடிக்கைகள் குறிப்பிட்ட தேதிகளுடன் நிறைவடைய இருக்கின்றன. அவை என்ன நடவடிக்கை, எந்த தேதியில் வருகிறது என்ற விவரத்தை இப்போது பார்க்கலாம்.


ஜூலை 7, 2023

ஜூன் மாதம் பிடித்தம் செய்யப்பட்ட அல்லது வசூல் செய்யப்பட்ட வரியை செலுத்துவதற்கான கடைசி தேதி இதுவாகும். அதே சமயம், அரசு அலுவலகங்கள் சார்பில் விதிக்கப்பட்ட மற்றும் வசூலிக்கப்பட்ட வரி அனைத்தையும் அன்றைய தினமே வருமான வரி சலான் இன்றி செலுத்திக் கொள்ள முடியும்.


2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வருமான வரிச் சட்டப்பிரிவுகள் 192, 194ஏ, 194டி, 194ஹெச் ஆகியவற்றின் கீழ் வசூல் செய்யப்பட்ட டிடிஎஸ் வரியை செலுத்துவதற்கான கடைசி நாளாகும்.


ஜூலை 15, 2023

வருமான வரிச் சட்டப்பிரிவு 194-1ஏ பிரிவின் கீழ் 2023ஆம் ஆண்டு மே மாதம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் வரிக்கான சான்றிதழ் வழங்க கடைசி நாள் ஆகும்.


வருமான வரிச் சட்டப்பிரிவு 194-1பி பிரிவின் கீழ் 2023ஆம் ஆண்டு மே மாதம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் வரிக்கான சான்றிதழ் வழங்க கடைசி நாள் ஆகும்.


வருமான வரிச் சட்டப்பிரிவு 194-4எம் பிரிவின் கீழ் 2023ஆம் ஆண்டு மே மாதம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் வரிக்கான சான்றிதழ் வழங்க கடைசி நாள் ஆகும்.


வருமான வரிச் சட்டப்பிரிவு 194எஸ் பிரிவின் கீழ் 2023ஆம் ஆண்டு மே மாதம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் வரிக்கான சான்றிதழ் வழங்க கடைசி நாள் ஆகும்.


2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறும் காலாண்டில் டிசிஎஸ் அறிக்கை வெளியிட இறுதிநாள் ஆகும்.


ஜூலை 30, 2023

2023 ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற காலாண்டில் வசூல் செய்யப்பட்ட டிசிஎஸ் வரிக்கு சான்றளிக்க வேண்டும்.


வருமான வரிச்சட்டப்பிரிவு 194-1ஏ கீழ் 2023 ஜூன் மாதத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கு சலான் மற்றும் அறிக்கை வெளியிடுதல்


வருமான வரிச்சட்டப்பிரிவு 194-1பி கீழ் 2023 ஜூன் மாதத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கு சலான் மற்றும் அறிக்கை வெளியிடுதல்


வருமான வரிச்சட்டப்பிரிவு 194எம் கீழ் 2023 ஜூன் மாதத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கு சலான் மற்றும் அறிக்கை வெளியிடுதல்


வருமான வரிச்சட்டப்பிரிவு 194எஸ் கீழ் 2023 ஜூன் மாதத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கு சலான் மற்றும் அறிக்கை வெளியிடுதல்


ஜூலை 31, 2023

2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற காலாண்டில் டெபாசிட் செய்யப்பட்ட டிடிஎஸ் வரிக்கான அறிக்கை


முதல் காலாண்டில் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை காலாண்டில் திரும்பப் பெறுதல்


ஜூன் வரையிலான காலாண்டில் பென்ஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதலீடு குறித்து தகவல் தெரிவித்தல்


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement