நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வரும் பால் சார்ந்த பொருட்களில் தயிர் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் தயிர் கால்சியம், புரதம், வைட்டமின்ஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள சுவையான ஒன்றாக இருக்கிறது.
பலருக்கும் தயிர் சாதம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிலர் சாப்பிட்டு முடித்த பிறகு தயிரில் லேசாக உப்பு கலந்து சாப்பிடுகின்றனர். சுவையோடு சேர்ந்து பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதால் நம் இந்திய உணவுகளில் தயிருக்கு சிறப்பு இடம் உள்ளது. ப்ரோபயாடிக்ஸ் (Probiotics) நிரம்பிய தயிர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பலர் கொஞ்சமாக தயிரை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தயிரை வீட்டிலேயே தயாரித்து கொள்கிறார்கள். சிலர் கடைகளில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் நமக்கு வீட்டிலேயே தயார் செய்யப்படும் தயிர் அல்லது கடைகளில் பேக்கேஜிங் செய்து விற்கப்படும் தயிர் எது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் இருக்கிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல ஊட்டச்சத்து நிபுணரான Bhakti Kapoor இன்ஸ்டாவில் சில தகவல்களை ஷேர் செய்துள்ளார். பேக்கேஜ்ட் தயிர் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் இடையே எது சிறந்தது என்று பார்க்கும் அவற்றில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் கன்டென்ட்டை கருத்தில் கொள்வது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
shelf life-ஐ அதிகரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அகற்றவும் கடைகளில் விற்கப்படும் பேக்கேஜ் தயிரானது Pasteurisation செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. Pasteurisation செய்வது தயிரை பாதுகாப்பாக வைத்திருக்கும் அதே நேரம் அதிலிருக்கும் ப்ரோபயாடிக்ஸ் கன்டென்ட் அளவை பாதிக்கிறது. அதாவது Pasteurisation ப்ராசஸ்-ஆனது தயிரில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் உட்பட நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்க கூடும் என்கிறார்.
இதனை கருத்தில் கொண்டால் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிரை விட வீட்டில் தயாரிக்கப்படும் தயிரில் ப்ரோபயாடிக்ஸ் அளவு அதிகமாக இருக்கும். அதிக ப்ரோபயாடிக்ஸ் கன்டென்ட் கொண்ட தயிர் வேண்டும் என்றால் வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரை பயன்படுத்துவதே சிறந்தது என்றும் Bhakti Kapoor கூறினார்.
0 Comments