Ad Code

Responsive Advertisement

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஆரோக்கியமானதா?

 



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஆரோக்கியமானதா என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 


இன்று பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் பிரச்சனை காணப்படுகிறது. இந்த பிரச்சனையால் பலரும் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் தான் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நிலையில் இந்த நோயிலிருந்து விடுபட நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டியது கட்டாயம் ஆகிறது.


தற்போது இந்த பதிவில் நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்குமா என்பது குறித்து குறித்து பார்ப்போம். ஊட்டச்சத்து நிபுணர் கார்கி ஷர்மா கூறுகையில் ஓட்சில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இது கரையக்கூடிய நார் சத்துக்கள் ஆகும்.


நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தங்களது உணவில் அதிகமாக ஃபைபர் சேர்த்துக் கொள்வது அவசியம். அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு தேவையான ஃபைபர் ஓட்ஸில் இருந்து கிடைக்கிறது. பீட்டா குலுக்கன் எனப்படும் ஏராளமான கரையக்கூடிய நார் சத்துக்கள் காணப்படுகிறது. இவை நமது குடலால்  நேரடியாக உறிஞ்சப்படுகிறது.


இதனால் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் அளவை ஊக்குவிக்க உதவுகிறது. சிறந்த குடல் ஆரோக்கியம் உண்டாகிறது. நார்ச்சத்து மூலம் நல்ல பாக்டீரியா வளர்ச்சி எளிதாக்குகிறது. இது ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்க உதவுவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.


ஊட்டச்சத்தில் சிக்கலான கார்போஹைட்ரேட்கள், புரதம் மற்றும் நார்சத்து ஆகியவை அதிகமாக காணப்படுகிறது. இது நீண்ட நேரம் நம்மை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு நமது உடலில் சோர்வை நீக்கி புத்துணர்வை தருகிறது. நீரிழிவு  நோயாளிகளுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது. இது உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் தேவையற்ற கலோரிகளை கரைய பண்ணுகிறது.


ஓட்ஸ் சாப்பிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை 

நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட ஓட்ஸை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட ஓட்ஸில் அதிக சர்க்கரை உள்ளது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். கலோரி உள்ளடக்கத்தை குறைக்க ஓட்ஸில் குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது தாவர அடிப்படையிலான பால் பயன்படுத்த வேண்டும். 


பாதாம், பூசணி விதைகள், ஆளிவிதைகள் அல்லது சியா விதைகள் உள்ளிட்ட கொட்டைகள் மற்றும் உலர் பழங்களைச் சேர்ப்பதன் மூலம் மேலும், நமது உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்த முடியும். ஓட்ஸில் அதிக இனிப்பு அல்லது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும். இது இரத்த சர்க்கரையின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement