Ad Code

Responsive Advertisement

காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா

 



தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடித்தால், நமது உடல் சீராக இயங்கும். நீரிழப்பு மற்றும் பல தொற்று நோய்களைத் தடுக்கலாம்.


உடல் வெப்பநிலையை சீராக்கவும், செரிமான அமைப்பை சீரமைக்கவும், உடல் எடையை குறைக்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும், சிறுநீரக பாதிப்பை தடுக்கவும் தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும்.


ஆனால், எப்போது தண்ணீர் அருந்துவது என்ற குழப்பம் மக்களிடையே இருந்து வருகிறது. காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால், தீங்கு விளைவிக்கும் கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதாகவும் கூறப்பட்டு வந்தது.


நாம் தூங்கும் போது வாயில் பாக்டீரியாக்கள் வளரும். பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கும்போது, ​​நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் இந்த பாக்டீரியாக்களைத் தான் நாம் உட்கொள்கிறோமாம் எனவே, இந்த பாக்டீயாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது என்கிறார்கள்.


மேலும், இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை அதிகரிக்கவும் அஜீரண பிரச்னையை  தடுக்கிறது என்றும் இதனால் உயர் ரத்த அழுத்தம் குறையும் எனவும் கூறப்படுகிறது.


எனினும் ஒரு சில உடல்நிலை மற்றும் ஒவ்வாமைகள் காரணமாக, மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு  பல் துலக்காமல் தண்ணீர் பருகுவது நல்லது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement