சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக அறிவித்து, மாலையிலேயே அந்த உத்தரவை நிறுத்திவைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி எம்.எல்.ரவியின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவியின் தாக்கல் செய்த வழக்குகளும், இன்று(21-07-2023) தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகாவாச்சாரி ஆஜராகி, இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிக்க கூடிய அதிகாரத்தை இலந்துவிட்டதாகவும், பொதுவாக அரசு ஊழியர்கள் 48 மணிநேறம் காவலில் இருந்தாலே அவர்கள் பதவியில் நீடிக்க கூடிய தகுதியை இழந்து விட கூடிய நிலையில், 1 மாதத்திற்கு மேல் காவலில் இருக்க கூடிய அமைச்சர் செந்தில்பாலாஜி இலாக்கா இல்லாத அமைசராக எப்படி நீடிக்க முடியும் என வாதிட்டார்.
அப்போது குறுகிட்ட தலைமை நீதிபதி 2 ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர்கள் பதவியில் நீடிக்கலாம் என இருக்கும் போது எந்த சட்ட விதிகளின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? என கேள்வியெழுப்பினார். அதற்கு எம்.எல்.ஏ-வாக நீடிக்கலாம் ஆனால் இலாக்கா இல்லத அமைச்சராக நீடிக்க முடியாது என வாதிட்டர்.
சிறையில் இருப்பவர் அமைச்சராக தொடர்வதை எதிர்த்து வழக்கு தொடரபடுவது இதுவே முதல் முறை என்றும், இது போன்ற வழக்குகள் இதுவரை எந்த நீதிமன்றத்திலும் இதுபோன்ற வழக்கு விசாரிக்கபடவில்லை எனவும் வழக்கறிஞர் தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டபிரிவு 163 ஆளுநருக்கு வழங்கியிருக்க கூடிய அதிகாரத்தின் படி அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவியில் நீதிபதை ஏற்க்க முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். அமைச்சராக நீடிக்க முடியாது என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.
செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது. நீக்கத்திற்கும், நிறுத்திவைக்கபட்டதற்கும் இடைபட்ட காலத்தில் அவர் எந்த பதவியிலும் இல்லை, அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்யபடாததால் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என வழக்கறிஞர் எம்.எல்.ரவி தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பு வாதங்கள் இன்று முடிவடைந்ததை அடுத்து, தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பதில் வாததிற்காக வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கபட்டது.
0 Comments