வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒலக்காசியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு சிவஞானம் என்பவரது மகள் பூமிகா(13) 7ஆம் வகுப்பு படித்துவருகிறாள். பள்ளியில் காலை பிரேயர் முடிந்ததும் பூமிகா மற்றும் அவளது 3 தோழிகள் கழிறைவக்கு சென்றனர்.
அப்போது அங்கு இருந்த பாம்பு பூமிகாவை கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தோழிகள் ஆசிரியர்களிடம் கூறினர். அங்கு வந்த ஆசிரியர்கள் பூமிகாவிடம் கேட்ட போது சிறிய பாம்பு கடித்ததாக கூறினாள். அதன் பின்னர் மாணவியை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் சிறுமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிறுமியின் உடலில் குறந்த அளவில் விஷம் பாய்துள்ளது. தற்போது விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர் போலிசார் விசாரணை இந்நிலையில் பாம்பு உள்ளையே இருந்ததா இல்லை வெளியில் இருந்து வந்ததா என போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. திறப்பதற்க்கு முன்பு ஒவ்வொரு பள்ளியையும் சுத்தப்படுத்தி தகுந்த ஏற்பாடு செய்து வைக்கும்படி தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி இந்த பள்ளியிலும் அவ்வாறு செய்த பின்னர்தான் திறந்தது குறிப்படதக்கது. அரசுப்பள்ளியில் மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments