கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில், குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
குடும்ப அட்டையில் உள்ள தகவலை வைத்து குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும். எனவே பலர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை முழுமையாக பெறும் வரை குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பெயரை நீக்குவதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால் அதனை பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments