தென் தமிழகம், அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவங்கை, கிருஷ்ணகிரியில் மலை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உக்கிரமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னையில் மட்டும் மொத்தம் 18 நாட்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் தகித்த வெப்பத்தால் மழை எப்போது வரும் என மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாதம் இறுதி முதல் தமிழகம் முழுவதும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நல்ல மழை பெய்தது.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments