முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பிய களக்காடு காவல் நிலைய முதல்நிலை காவலர் வெற்றிவேல் பெருமாளை சஸ்பெண்ட் செய்துள்ளார். திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான மாலைராஜா அளித்த புகாரில் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
நெல்லை எஸ்பி.சிலம்பரசனிடம் மாலைராஜா அளித்த புகாரில் வெற்றிவேல் பெருமாளை பணியிட நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். இவர் நெல்லை பெருமாள் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தநிலையில், முதல்நிலை காவலரான பெருமாள், முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை சந்தித்த புகைப்படத்தையும் வைத்து அதோடு காமெடி நடிகர் போண்டாமணியின் புகைப்படத்தையும் இணைத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதோடு நடிகர் பிரபு நாதஸ்வரம் வாசிப்பது போன்ற காட்சியையும் இணைத்துள்ளார்.
இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா தலைமையிலான திமுகவினர் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இந்த நிலையில் முதல் நிலைக் காவலர் நெல்லை பெருமாள் பனியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்தார்.
0 Comments