தற்போதைய காலகட்டத்தில் எல்லோருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் வைத்திருக்கும் செல்போன் ஒரு வருடம் கூட பயன்படுத்த முடியாமல் அடுத்தடுத்து புதிய செல்போன்களை வாங்கி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தற்போதைய ஸ்மார்ட் ஃபோன்களில் பேட்டரியில் அதிக நேரம் சார்ஜ் இல்லாமல் இருப்பது தான். அப்படி உங்களுடைய செல்போன்களிலும் சார்ஜ் அதிக நேரம் நீடிக்கவில்லையா? இதனை ட்ரை செய்து பாருங்கள்.
போன் வைப்ரேட் மோடில் இருந்தால் சார்ஜ் விரைவில் குறையும். எனவே முடிந்த அளவு வைப்ரேட் மோடை கட் செய்வது நல்லது.
அதே போல், வால் பேப்பர்கள், ஸ்மார்ட் போன் தீம் இருந்தால் சார்ஜ் விரைவில் குறையும். அதற்கு பதிலாக கருப்பு நிற வால் பேப்பர்களைப் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் குறையாது.
ஸ்மார்ட் ஃபோன்களில் ஸ்டோரேஜ் முழுவதுமாக நிரம்பியிருந்தால் சார்ஜ் வேகமாக குறையும்
அதேபோல் உங்கள் போனில் வைஃபை ஹாட்ஸ்பாட் லொகேஷன் ப்ளூடூத் போன்ற வசதிகளை தேவையற்ற நேரத்தில் ஆப் செய்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் செல்போனின் பிரைட்னெஸ் தேவையான அளவுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக உங்கள் செல்போனுக்கு உங்களுடைய சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற செல்போனின் சார்ஜரை பயன்படுத்தக் கூடாது.
மேலும், தேவையற்ற செயலிகளிளையும் அன்இன்ஸ்டாஸ் செய்வது நல்லது.
0 Comments