கல்விக்கு உதவுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமி - இன்ப அதிரிச்சி கொடுத்த மாவட்ட ஆட்சியர்
திருச்சியில் முதலமைச்சரின் பயணத்தின் போது தனது கல்விக்கு உதவுமாறு கேட்டுக் கொண்ட சிறுமி குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கோவையில் வீடு ஒதுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் என்.கே.ஜி நகரை சேர்ந்த கவிதா மற்றும் அவரது மகள் காவ்யா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார்.அந்த மனுவில், தனது கணவர் இறந்திவிட்ட நிலையில் அவரது பெயரில் உள்ள சொத்தை விற்க முடியாமல் இருப்பதாகவும், சொத்தை விற்று பணம் திரட்ட சட்ட உதவியும், அதுவரை தனது 2 குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது விசாரணை நடத்தி திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, மனு அளித்த சிறுமி குடும்பத்துக்கு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் கோவையில் வீடு ஒதுக்கீடு செய்ய திருச்சி ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து 2 குழந்தைகளின் கல்விச்செலவை வழங்கவும் திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். சொத்து பிரச்சனையை தீர்க்க இலவச சட்ட உதவி செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் மனுதாரர் கவிதாவின் கல்வித்தகுதி அடிப்படையில் கோடையில் ஆட்சியர் மூலம் வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments