இரண்டு மரம்
ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா? என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.
குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம். அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது.
அதற்கு மரம் கூறிய பதில் எனக்கு தெரியும் நான் வழுவடைந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு என்றது.
நீதி :
உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்
0 Comments