ஆப்பிள் வாட்சால் உயிருடன் இருக்கும் இந்திய இளைஞருக்கு ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பதிலளித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஸ்மிட் மேத்தா லோனவாலா என்ற நகரில் அமைந்துள்ள விசாப்பூர் மலைப் பகுதிக்குத் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். மலையேற்ற பயணம் என்பதால் பாதை கரடுமுரடாக பள்ளத்தாக்குகள் நிறைந்ததாக இருந்தன. துரதிஷ்ட வசமாக 130 அடி பள்ளத்தாக்கு ஒன்றில் தவறி விழுந்ததில் கால் பகுதி முற்றிலும் சேதமானது. ஸ்மிட் மேத்தா பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதால் அவரது நண்பர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
அப்போது, அவரை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். அந்த தருணத்தில் அவர் வைத்திருந்த ஐபோன் 13 அவரிடம் இல்லை. அதிர்ஷ்டவசமாக அவரிடம் ஆப்பிள் 7 சீரிஸ் வாட்ச் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்மூலம் தனது குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறி மலைப் பகுதியில் உள்ள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கப்பட்டு, ஸ்மிட் மேத்தா அங்கிருந்து மீட்கப்பட்டார். பின் லோனாவாலாவில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக புனேவில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் கால் பகுதி முற்றிலும் சேதமடைந்திருந்ததால் 5 நாட்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பின் ஜூலை 16 2022 அன்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. “இன்று உயிருடன் இருக்க ஒரே காரணம் ஆப்பிள் வாட்ச் தான் எனக் கூறி நெகிழ்ந்தார்” ஸ்மிட் மேத்தா.
இதனைத் தொடர்ந்து ஸ்மிட் மேத்தா நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டீம் ஹீக்கிற்கு மெயில் அனுப்பியுள்ளார், இதனைப் படித்துவிட்டு பதில் அனுப்பி டிம் ஹீக் “கோர விபத்தைச் சந்தித்துள்ளீர்கள், நீங்கள் மீண்டும் நலம்பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த செய்தியை என்னோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்” என சிமிட் மேத்தாவிற்குப் பதில் அளித்துள்ளார்.
0 Comments