Ad Code

Responsive Advertisement

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

 



மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க தவறிய ஆளுநரை கண்டித்து சென்னையில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தமிழ்­நாட்டில் உயர்கல்வி பயின்ற கல்லூரி, பல்கலைக்­கழக மாணவர்­களுக்கு பட்­டப்படிப்பு சான்றிதழ் வழங்காமல் கடமைத் தவறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வலியுறுத்தியும், ஒன்றிய பாசிச பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு விளம்பரத் தூதுவராகச் செயல்படுவதுடன், தமிழ்­நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை முடக்குகின்ற வகையில் அரசியல் சட்­டவிதிகளுக்கு முரணாக பல்கலைக்­கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் அத்துமீறி செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவியின் போக்கினை கண்டித்தும் தமிழ்நாடு மாணவர் இயங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஆளுநர் மாளிகைகக்கு அருகில் உள்ள சின்னமலை சந்திப்பில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, திமுக மாணவர் அணி தலைவர் ராஜூவ் காந்தி, இந்திய மாணவர் சங்கம்(எஸ்எப்ஐ) மாநில செயலாளர் நிரூபன் சக்ரவர்த்தி மற்றும் மதிமுக, மாணவர் அணி, ஏஐஎஸ்எப், ஆர்எஸ்எப், முஸ்லிம் மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, சமூகநீதி மாணவர் இயக்கம், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் தமிழ்­நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் சட்ட மன்றப்பேரவையில், பல்கலைக் கழகத்துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்­டமுன்வடிவுகளை உடனே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள மருத்துவப்படிப்புக்கு பொதுக் கலந்தாய்வு முறையை ஒன்றிய பாஜ அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement