Ad Code

Responsive Advertisement

மௌனம் ஒரு மகத்தான சக்தி

 



ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ செய்திகளை, ஒரு மௌனம் சொல்லி விடும்.மௌனம் ஒரு மகத்தான சக்தி...!*


மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் உபயோகித்து வெற்றி கண்டு இருக்கிறார்கள்..


எப்போது பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது. ஆனால்!, அதை விட, ''எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்து இருப்பது மிக அவசியம்...*


ஒரு அரசனின் அவையில், அறிவுக்கூர்மையும் திறமையும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னர் சினந்து கொண்டார்...


அவரை எப்படியாவது கீழ்மைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஒருநாள் அவையில், மன்ன்ர் அறிவாளியான அந்த அமைச்சரைப் பார்த்து,


முட்டாள்களிடம் பழக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்...’ என்று கேட்டார்...


அதற்கு அந்த அமைச்சர் எவ்வித பதிலும் கூறாமல் மெளனமாக இருந்தார்...


அவர் பதில் தெரியாமல் இருக்கிறார் போலும் என்று நினைத்த மன்னர், “என்ன அமைச்சரே! நான் கேட்ட கேள்வி உமது செவிகளில் விழவில்லையா...


முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்...?’ என்று மீண்டும் கேட்டார்.


அதற்கும் பதில் கூறாமல் மெளனமாகவே அமைச்சர் இருந்தார்...


இதனால் கோபமடைந்த மன்னர்,


என்ன, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எதுவும் கூறாமல் விழிக்கிறீரே...! நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லையா? அல்லது என் கேள்விக்குப் பதில் தெரியவில்லையா...?’ என்று கேட்டார்


அமைச்சர், மன்னருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு


மன்னர் பெருமானே!, உங்கள் கேள்விக்கு உடனே பதிலளித்து விட்டேனே...! நீங்கள் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்றார்.

உடனே மன்னன், “மூன்று முறை நான் கேட்டும் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அல்லவா இருந்தீர் என்றான்.


அதற்கு அமைச்சர்,


ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பேச வேண்டுமென்றால் மெளனம் தான் சாதிக்க வேண்டும்...!’ என்றார். மன்னர் வாயடைத்துப் போனார்


ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவனுக்குப் பிடித்தவரின் மௌனம் தான். மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கமளிக்கும். கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது. பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது...


அதே நேரத்தில் வாயை மூடிக்கொண்டு பேசாமலே இருப்பது உண்மையான மௌனம் இல்லை. அதாவது அக,புற மனதினில் அமைதியான முறையில் கடைபிடிக்கப்படும் மௌனமே மிகச்சிறந்ததாகும்...


ஒவ்வொரு நாளும் நாம் பலரிடம் பேசுவது அவசியமாகிறது. நாள்தோறும் பிறரிடம் பேசுவதால் உள்ளம் களைப்பு அடைகிறது. சில வேளைகளில், மனம் பாதிப்படையலாம், அமைதியை இழக்க நேரலாம்...


நாள்தோறும் குறைந்தபட்சம் பத்து நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம். அவ்வாறு செய்வதால் ஒருவர் தம்மை நிலைப்படுத்துகிறார்


அதனால் அவர் அன்றைய நாளில் நிகழ்ந்த அனைத்தைப் பற்றியும், அமைதியாகவும், தெளிவாகவும் யோசிக்க முடிகிறது. தேவையான சமயத்தில் மெளனமாக இருப்பது மூலமே மகத்தான செயல்களை சாதிக்க முடியும்


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement