காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளான பள்ளி கட்டிடம், சமையல் கூடம், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, உள்ளாட்சி பிரதிநிதிகள் மரியாதை நிமித்தமாக கலெக்டருக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர். அவர்களின் மனது புண்படக்கூடாது என முதலில் சால்வை வாங்கிய ஆட்சியர், கோபித்துக்கொள்ளாதீர்கள் என அவர்களிடமே சால்வையை திருப்பி கொடுத்துவிட்டு. பணிகளை மேற்கொண்டார்.
பின்னர், அங்கிருந்த அதிகாரிகளிடம், ஒரு நாள் டிராமா வேலை எல்லாம் வேண்டாம். எது தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். நான் வருவதற்காக பிளீச்சிங் பவுடர்கள் எல்லாம் தெளித்துள்ளீர்கள். பொதுமக்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். யாரோ வந்திருக்கிறார்கள்.
அதான் இதெல்லாம் செய்திருக்கிறார்கள் என நினைப்பார்கள். தினமும் எப்படி சுத்தம் செய்யவேண்டுமோ அதுபோன்று செய்யுங்கள் என அதிகாரிகளிடம் கடிந்துகொண்டார். இதனை கேட்ட அதிகாரிகள், அதன்படி செய்வதாக கலெக்டரிடம் உறுதி அளித்தனர்.
0 Comments