தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்து 5 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெப்பம் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிக அளவில் இருந்தது. பல நாட்கள் தொடர்ச்சியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இதற்கிடையே சில நாட்களாக வெப்பம் குறைந்து வந்த சூழலில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் திடீரென கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, கிண்டி, அடையாறு என நகரில் பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 செமீ, தரமணியில் 12 செமீ, மழைப் பதிவாகியிருக்கிறது.
இதனை அடுத்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தென் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஜூன் 19) தமிழ்நாடு, கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்ய கூடும். மேலும், அடுத்த 5 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
0 Comments