ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒடிசா, மற்றும் தமிழகத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று(மே 03) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா சபை, ஜனாதிபதி, பிரதமர், அமித்ஷா, நட்டா, அஷ்னினி வைஷ்ணவ், ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கார்கே, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
0 Comments