Ad Code

Responsive Advertisement

IPL Final - இன்றும் மழை பெய்தால் எந்த அணிக்கு வெற்றி என தெரியுமா ?

 



ஐபிஎல் பைனல் நாளன்று தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் தடைபட்டு ரிசர்வ் நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முடிவு சிஎஸ்கே அணியை எந்த வகையில் பாதிக்கும் என்பதை பார்ப்போம்.


ஐபிஎல் பைனல் ஞாயிற்றுக்கிழமை (28ம் தேதி) நடைபெறவிருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. மழை பெய்ததால் 7 மணிக்கு டாஸ் போடுவது தாமதமானது. 7.30 மணி வரை பார்க்கப்பட்டது, தொடர்ந்து மழை நிற்காமல் பெய்ததால் தாமதமானது.


இரவு 9:30 மணிக்குள் மழை நின்று விட்டால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயல்பான 20 ஓவர்கள் ஆட்டம் முழுமையாக நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. ஒருவேளை 9.30 மணியை தாண்டி மழை பெய்துவந்தால், 10.30 மணிவரை பார்க்கப்படும். அப்போது மழை நின்று ஆட்டம் நடைபெறும் பட்சத்தில், போட்டி தலா 15 ஓவராக மாற்றப்படும் என்று போட்டியின் நடுவர்கள் அறிவித்தனர்.


10:30 மணி இருக்கையில், மழை நிற்காமல் பெய்ததால், கடைசியாக 11 மணிக்குள் மழை நிற்கவேண்டும். இல்லையெனில் போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தனர். அதிகபட்சமாக 11.15 மணி வரை பார்க்கப்பட்டது  பின்னர் போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது


மே 29ஆம் தேதி திங்கள் கிழமை அன்று இரவு 7.30 மணியளவில் இறுதிப்போட்டி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிசர்வ் நாளன்றும் தொடர்ந்து மழை பெய்து போட்டி நடப்பதில் தடையானால் கோப்பை நேரடியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு செல்லும் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.


ஐபிஎல் விதிப்படி, புள்ளி பட்டியலில் பைனலுக்குள் வந்துள்ள இரு அணிகளில் எந்த அணி முன்னணியில் இருக்கிறதோ, அதற்கு கோப்பை நேரடியாக செல்லும்.


சிஎஸ்கே அணியை விட குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேற்றத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி 17 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இந்த அட்வான்டேஜ் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டும்.


அகமதாபாத்தில் நாளை மழைபொழிவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. மழை மீண்டும் வந்து விடக்கூடாது என்று சிஎஸ்கே ரசிகர்களும் வேண்டுகின்றனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement