தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டு நலத்திட்ட செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் பள்ளி கல்வித்துறைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உதவி திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாட புத்தகங்கள், காலை சிற்றுண்டி, சைக்கிள், புத்தக பை, காலனி, லேப்டாப், சத்துணவு, பென்சில்கள் போன்றவையும் வழங்கப்படுகிறது.
அதைப்போல் மருத்துவம் உள்ளிட்ட உயிர் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் மாணவர்களை கலந்து கொள்ள அழைத்து செல்லப்படுகின்றனர். இணையாக கணினி நூலகம், ஆய்வகம் என அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்து மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோடை விடுமுறையின் தொடக்கத்தில் இருந்தே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments