நம்மில் பெரும்பாலானோர் அசைவ பிரியர்கள். அந்தவகையில், இந்த முறை மட்டனை வைத்து ருசியான மற்றும் மிருதுவான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 500 கிலோ.
பச்சை மிளகாய் - 1.
மிளகு - 1 ஸ்பூன்.
சோம்பு - 1 ஸ்பூன்.
பட்டை - 1.
ஏலக்காய் - 3.
பே இலை - 1.
சீரகம் - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி - 2 கொத்து.
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1ஸ்பூன்.
தேங்காய் துருவல் - ¼ கப்.
கடலை மாவு - ¼ கப்.
வெங்காயம் - 1.
கறிவேப்பிலை - 1 கைப்பிடி.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
f25807d5eb6661585d3fba9157854ed1076010994d7b13bb6ae280d0045707c6
செய்முறை :
முதலில் ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட மட்டனை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து 10 நிமிடத்திற்கு வேக வைத்து, மட்டனை தனியே வடிக்கட்டி எடுக்கவும்.
இப்போது, எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும். இதை தொடர்ந்து அதில், கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இதனுடன் மட்டன் துண்டு, தேங்காய் துருவல், பட்டை, கிராம்ப உள்ளிட்ட மசாலா பொருட்களை சேர்த்து விழுதாக அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர், அரைத்த சேர்மத்துடன் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ள கோலா உருண்டைக்கான சேர்மம் தயார்.
தற்போது, கோலா உருண்டை பொரித்து எடுக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சூடாக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும், அதில், பிசைந்து வைத்த கோலா உருண்டை சேர்மத்தை சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்க சுவையான கோலா உருண்டை ரெடி.
0 Comments