Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

 



தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை செயலாளரான அன்னீ மேரி ஸ்வர்னா அரியலூர் ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .


கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரி வரி புலனாய்வு பிரிவு இணை ஆணையர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா நாமக்கல் ஆட்சியராகவும், நில ஆவணங்கள் மற்றும் கணக்கெடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குநர் கமல் கிஷோர் செங்கல்பட்டு ஆட்சியராகவும், சென்னை வணிக வரி நிர்வாகப் பிரிவு இணை ஆணையர் சங்கீதா

மதுரை ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


வழிகாட்டுதல் துறை செயல் இயக்குநர் ஆஷா அஜித் சிவகங்கை ஆட்சியராகவும், நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ராகுல்நாத் தூத்துக்குடி ஆட்சியராகவும், சேலம் மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ் திருப்பூர் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றக செயல் இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா ஈரோடு ஆட்சியராகவும், சேலம் சாகோசேர்வ் கூட்டுறவு சொசைட்டி மேலாண்மை இயக்குநர் பூங்கொடி திண்டுக்கல் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நாகை ஆட்சியராகவும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணை மேலாண் இயக்குநர் சராயு கிருஷ்ணகிரி ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement