தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.248 உயர்ந்தது.
தங்கம் விலை கடந்த டிசம்பர் 31ம் தேதி புதிய உச்சத்தை, அதாவது 28 மாதங்களுக்கு பிறகு சவரன் ரூ.41,040க்கு விற்கப்பட்டது. ஜனவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,200க்கும், 3ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,528க்கும், 4ம் தேதி சவரனுக்கு ரூ.376 உயர்ந்து சவரன் ரூ.41,904க்கும் விற்கப்பட்டது. ஜனவரி 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.864 வரை உயர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,824க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.38 குறைந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,221க்கும், சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,768க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோர் இடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
0 Comments