மாணவர்களின் மன நலனை மேம்படுத்த, 'மனம்' திட்டத்தை, முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள, 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 'மனம்' என்ற மாணவர்களின் மன நலன் காக்கும் சிறப்பு திட்டம் துவக்கப்பட்டு, 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில், மருத்துவக் கல்லுாரி முதல்வர், மன நலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
மாணவர்களின் நல்வாழ்வுக்கான நெறிமுறைகள் குறித்த புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும்.
மாணவர்களின் கலை, கற்பனை உட்பட தனித் திறன்களைக் கண்டறிந்து, மேம்பாட்டுக்கான வழிவகை உருவாக்கப்படும்.
உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ள, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், 'மனம்' தொலைபேசி எண், '14416' பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இத்திட்டம் முதல் கட்டமாக, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் துவக்கப்பட்டுள்ளது. பின், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 22.84 கோடி ரூபாய் மதிப்பில், 75 புதிய மேம்படுத்தப்பட்ட, நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ள, 108 அவசர கால ஊர்திகளை, முதல்வர் துவக்கி வைத்தார்.
மேலும் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, இடைநிலை பராமரிப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.
0 Comments