Ad Code

Responsive Advertisement

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு - 85 வயது திமுக தொண்டர் தீக்குளித்து தற்கொலை

 



மேட்டூர் அடுத்த தாளையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பி. என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு  தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 85). இவர் நங்கவள்ளி திமுக  முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஜானகி என்ற மனைவியும் மணி ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.


இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார். மேலும் திமுக  ஆட்சியின் போது  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.


இந்த நிலையில் மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்படுத்தி வருகிறது. மன உளைச்சலில் இருந்த தங்கவேல் பி. என் .பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு தாழையூர்  திமுக கட்சி அலுவலகத்தில் இன்று 11 மணி அளவில் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீ பற்ற  வைத்துக் கொண்டு அதே இடத்தில் உயிழந்தார்.


மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார் தங்கவேல், அதில் மோடி அரசே மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி  கோமாளி எதுக்கு , இந்தி எழுத்து மாணவ மாணவிகள் வாழ்க்கை  பாதிக்கும் இந்தி ஒழிக இந்தி ஒழிக என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார்.  இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement