Ad Code

Responsive Advertisement

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 



தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (16-ம்தேதி) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்துகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், அதைஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement