Ad Code

Responsive Advertisement

11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 



தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் இன்று (03-11-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று (03-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement