Ad Code

Responsive Advertisement

திருப்பூர் சார்-ஆட்சியராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் பொறுப்பேற்பு

 




திருப்பூர் சார்-ஆட்சியராக நியமிக்கப்பட்ட நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (29) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.


 திருப்பூர் வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த பண்டரிநாதன் கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணனை திருப்பூர் சார்- ஆட்சியராக நியமித்து கடந்த சில நாள்களுக்கு முன்பாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.


 நடிகர் சின்னிஜெயந்தின் மகனான இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


 பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எனது உழைப்பு திருப்பூர் மக்களின் நலன் சார்ந்தவையாக இருக்கும். எனது பெற்றோர் திரைத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாகப் போதித்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


 திருப்பூர் சார் ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொன்ட அவரை வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement