Ad Code

Responsive Advertisement

அரசு அலுவலகங்கள் 'வெறிச்'

 

அரசு அலுவலகங்களில், நேற்று குறைவான ஊழியர்களே பணிக்கு வந்தனர்.


தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை ஒட்டி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.


தீபாவளிக்கு முந்தைய நாட்கள், சனி, ஞாயிறு என்பதால், 21ம் தேதி இரவே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.


தீபாவளி முடிந்த மறுநாள் ஊருக்கு திரும்புவது சிரமம் என்பதால், பள்ளிகள், கல்லுாரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு மட்டும், நேற்று அரசு விடுமுறை அறிவித்திருந்தது. பொது விடுமுறை அறிவிக்கப்படாததால், அரசு அலுவலகங்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின.


ஆனால், அரசு ஊழியர்கள் வருகை குறைவாகவே இருந்தது. பல அலுவலகங்களில், 50 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே, பணிக்கு வந்திருந்தனர். சில துறைகளில், 30 சதவீத ஊழியர்களே பணிக்கு வந்திருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்னை தலைமைச் செயலகத்திலும், குறைவான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களும் வரவில்லை. இதனால், தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைவாகவே இருந்தது.


இன்று, அரசு அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement