Ad Code

Responsive Advertisement

தொப்பையை குறைக்கணுமா? அப்போ மறக்கமால் இந்த அற்புத பானத்தை தொடர்ந்து குடிங்க போதும்

 



உடல் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் பல வகையான முயற்ச்சிகளையும், முறைகளையும் பின்பற்றுகிறார்கள்.


இருப்பினும் பலன் கிடைப்பதில்லை. இதனை எளியமுறையில் கரைக்க ஒரு அற்புத பானங்கள் உள்ளன. அதில் சீரக தண்ணீர் பெரிதும் உதவுகின்றது.


அந்தவகையில் இது தொப்பை குறைக்க எப்படி உதவுகின்றது என்று பார்ப்போம்.  


எப்படி குறைக்க உதவுகின்றது? 

சீரகம்  எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இதன் மூலம் அனைத்து வயிற்று கோளாறுகளிலிருந்தும் விடுபடலாம்.


சீரக தண்ணீரில் கலோரி குறைவாக இருப்பதாலும், இது கொழுப்பைக் குறைக்க உதவுவதாலும், உடல் எடை குறைப்புக்கு இதை குடிப்பது நன்மை பயக்கும்.


சீரக நீரில் இரும்புச்சத்து மிக அதிகமாக காணப்படுவதோடு, உடலின் வீக்கத்தைக் குறைக்கும் சக்தியும் இதற்கு உண்டு.  


 தயாரிப்பது எப்படி?

சீரக தண்ணீர் தயார் செய்ய, 2 தேக்கரண்டி சீரக விதைகளை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆறியதும் பருத்தி துணியால் வடிகட்டவும். பின், இந்த பானத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். தொடர்ந்து 2-3 வாரங்கள் குடித்து வந்தால் அதன் பலன் தெரியும்.


நீங்கள் விரும்பினால், சீரக விதைகளை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். சீரகப் பானத்தை எளிதில் தயார் செய்ய விரும்பினால், அதை அரைத்து பொடி செய்து, ஒரு ஸ்பூன் சீரகப் பொடியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். சாப்பிட்ட பிறகு இந்த பானத்தை குடித்தால், அதிக பலன்கள் கிடைக்கும்.   


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement