சின்னசேலத்தை அடுத்து கனியாமூரில் கலவரத்தின் போது சூறையாடப்பட்ட பள்ளியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இப்பள்ளியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது.
பள்ளி வளாகம் தீக்கிரையாக்கப்பட்டது. வகுப்பறைகள் சேதப்படுத் தப்பட்டன. இதையடுத்து மாவட்டநிர்வாகம் பள்ளியை மூட உத்தர விட்டது. இதைத் தொடர்ந்து இப்பள்ளியை சீரமைக்க பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக் கப்பட்டது.
பள்ளியைத் திறக்கக் கோரி, மாணவர்களின் பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பள்ளியைத் திறப்பது தொடர்பாக பரிசீலிக்க ஆட்சியருக்கு 10 நாட்கள் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார், பெற்றோர், பள்ளி நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்த கள்ளக்குறிச்சி ஆட்சியர், தற்போது பள்ளியை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் காவல் துறையினரின் கண்காணிப்பில் பள்ளியின் சீரமைப்புப் பணிகளை நடத்த அடுத்த 45 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. பள்ளி வளாகம் தீக்கிரையாக்கப்பட்டது.
0 Comments