மாசு, மறு, பரு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் விருப்பமாக இருக்கும். முகம் பொலிவுடன் இருக்க பலரும் பலவிதமான வழிகளை கடைபிடித்து வருகின்றனர், அதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் தான், இவை முகத்திற்கு தற்காலிகமான அழகை மட்டுமே கொடுக்கிறது, நாளடைவில் அதிக சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உண்மையை சொன்னால் நம்முடைய சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு நாம் எதுவும் செய்ய வேண்டாம், அன்றாடம் செய்கின்ற சில விஷயங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் இயற்கையாக சருமத்தை பொலிவு பெற கடைப்பிடிக்கவேண்டிய ஆறு வழிகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
முகத்தில் கை வைக்க கூடாது:
முகம் பொலிவு பெற இயற்கையான ஆறு வழிகள்Glowing Skin Tips in Tamil: முகத்தில் அடிக்கடி கை வைப்பதை தவிர்ப்பது நல்லது. நம் கைகளில் இருக்கும் கிருமிகள் முகத்தில் உள்ள துளைகள் வழியாக உள்சென்று பரு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
உங்களுக்கு ஏற்கனவே முகப்பரு இருந்தால் அதை கிள்ள கூடாது.
தூங்கும் போது சுத்தமான தலையணையை உபயோகபடுத்துவது நல்லது, ஏனெனில் தலையில் இருக்கும் பொடுகு, எண்ணெய் தலையணையில் இருக்கும், அதில் நீங்கள் முகத்தை வைத்து உறங்கும்போது சரும பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சூழல் உருவாகலாம்.
முகத்தை அடிக்கடி கழுவ கூடாது. சருமத்தை ஒரு நாளிற்கு இரண்டு முறை கழுவுவது நல்லது.
அழகுசாதன பொருட்களை அதிகம் உபயோகபடுத்த வேண்டாம். இரவு தூங்குவதற்கு முன்பு மேக்கப் போட்டிருந்தால் அதை கழுவி விட்டு உறங்கவும்.

0 Comments