Ad Code

Responsive Advertisement

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் - இணையத்தில் மாணவர்கள் பதிவு செய்ய யுஜிசி உத்தரவு

 




இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், இனிமேல் ராகிங் செய்ய மாட்டோம் என்று இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று யூஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி விடுத்துள்ள உத்தரவு: உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், ‘ராகிங்கில் ஈடுபட மாட்டேன்’ என www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


 மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகள் இதை பின்பற்ற வேண்டும். அனைத்து கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்களில், மாணவர்கள் நடமாடும் இடங்கள், வளாகங்கள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த  வேண்டும். முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியை பொருத்த வேண்டும். விடுதிகள், உணவகங்கள், கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு  தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும். கல்லூரிகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement