Ad Code

Responsive Advertisement

‘பிளாக் காபி’ உடல் எடையை குறைக்க உதவுமா..?

 




பிளாக் காபி அதிகமான சுவையை தருவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய், இதய நோய், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களைத் தடுக்கும் தன்மை கொண்டது. இதைத் தவிர, எடையை குறைக்கவும் உதவுகிறது.


பிளாக் காபி வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சர்க்கரை, பால், கிரீம் போன்ற சேர்க்கைகள் இல்லாமல் கருப்பு காபியை பருக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.


இந்த காபியை அருந்துவதினால் இன்னும் பல நண்மைகள் கிடைக்கிறது. அதாவது பிளாக் காபி வளர்சிதை மாற்ற செயல்முறைகளை வேகப்படுத்தி, பசி எடுக்கும் தன்மையை கட்டுப்படுத்துகிறது. இது பெப்டைட் ஒய் எனப்படும் பசி ஹார்மோனிற்கு எதிராக செயல்பட்டு பசியை கட்டுப்படுத்துகிறது.


கருப்பு காபியில் இருக்கும் கஃபைன் உடல் ஆற்றலை ஊக்குவித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் அதிக கலோரிகளை எரித்து உடலை சுறுசுறுப்பாக மாற்றுகிறது. அதுமட்டுமல்லாமல் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. இது கலோரி இல்லா பானம் என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பு காபி குளோரோஜெனிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இது எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது.


தினமும் கருப்பு காபி குடிப்பது எடை குறைப்பிற்கு உதவும். உடற்பயிற்சிக்கு முன் கருப்பு காபியை குடிப்பது உடலில் இருக்கும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement