Ad Code

Responsive Advertisement

காய்ச்சல், இதய பாதிப்புக்கான 26 மருந்துகள் தரமற்றவை

 



இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.


கடந்த மாதத்தில் மட்டும் 1,096 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலான மருந்துகள் இமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.


தரமற்ற மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement