கடலூர் மாவட்டம் ஆதனுர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் ஓட்டினால் கட்டப்பட்ட கட்டிடம் என்றும் அடிக்கடி ஓடுகள் இடிந்து விழுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அது போன்று நடக்கும் நிலையில் மரத்தடியில் வந்து படிப்பதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். நல்ல ஆசிரியர்கள் இருந்தும் நல்ல கட்டிட வசதி இல்லை என்றும் மாணவர்கள் கூறுகிறார்கள்.இதனால் தங்களுக்கு புதியதாக கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
0 Comments