திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கறி விருந்து அளித்தனர்.
இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்றுமுன்தினம் மதியம் ஆசிரியர்கள் நெய் சோறுடன் கறி விருந்து வைத்தனர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியாக விருந்தினை சுவைத்து உண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி, ஆசிரியர்கள் ஜெயந்தி, பிரபாவதி, கியூஸ் ஹெப்சிபா, ஞானதீபம் எமி, தர்மராஜ் மற்றும் கீழநாலுமூலைக்கிணறு ஊர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
0 Comments